மலேசிய தின கொண்டாட்டம்: சரவாக்கில் 457 போலீசார் பணியில் ஈடுபடுவர்

கூச்சிங்:

ரும் சனிக்கிழமை பெர்பாடுவான் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள மலேசிய தின கொண்டாட்டத்தை சுமூகமாக நடத்துவதற்காக மொத்தம் 457 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என, சரவாக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அஸ்மான் அகமட் சப்ரி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பாதுகாப்பு கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து மேலாண்மை ஆகிய பணிகளில் போலீசார் ஈடுபடுவார்கள் என்றார் அவர.

“இரவு 8.30 மணிக்கு தொடங்கும் நிகழ்வில் சுமார் 5,000 பேர் கலந்துகொள்வார்கள் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் கொண்டாட்டத்தின் போது ஸ்டேடியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொள்ளும் இந்த கொண்டாட்டத்தில், முதன்மை விருந்தினராக சரவாக் ஆளுநர் டான்ஸ்ரீ முகமட் அஸ்ஃபியா அவாங் நாசர் கலந்து கொள்கிறார் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here