போதை கலந்த வலி நீக்கும் மாத்திரைகள் சட்ட விரோத விற்பனை

நியூயார்க் – வலி நிவாரண மாத்திரைகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து, அமெரிக்காவில் சட்ட விரோதமாக விற்பனை செய்த 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

அபின் என்ற போதை கலந்த வலி நிவாரண மாத்திரைகள் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அமெரிக்காவில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன. இவை மக்களுக்கு பல்வேறு உபாதைகளை ஏற்படுத்துவதோடு, சில சமயங்களில் சுவாசத்தையும் நிறுத்தி மரணத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால், இதை தடுக்கும் முயற்சியில் ஈடுபடும் மாநிலங்களுக்கு 200 கோடி அமெரிக்க டாலர் வெகுமதி அளிக்கப்படும் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து ‘டிரமதால்’ எனப்படும் வலி நிவார மாத்திரைகளை இறக்குமதி செய்து வாடிக்கையாளர்களுக்கு தபால் மூலம் விற்பனை செய்ததாக எழில் செழின் கமல்தாஸ் (46), முகுல் சுக் (24), குலாப் குலாப்(45) தீபக் மன்சந்தா(43), பார்த்திபன் நாராயணசாமி(58) பல்ஜீத் சிங்(29), ஹர்ப்ரீத் சிங்(28) விகாஸ் எம் வர்மா(45) ஆகிய எட்டு பேரை அமெரிக்க போலீசார் கைது செய்து, சட்ட விரோத மருந்து விற்பனை, நிதி மோசடி வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இந்த மருந்தில் அபின் போதை கலக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் எழில் செழியன் கமல்தாஸ்க்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் மற்றவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here