பாம்பை வைத்து கொல்லப் போவதாக மோடிக்கு பாடகி கொலை மிரட்டல்

லாகூர்  பாம்பு, முதலை ஆகியவற்றை கடிக்க வைத்து கொல்ல போவதாக பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பாடகி டிவிட்டரில் விடுத்துள்ள மறைமுக கொலை மிரட்டல் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து, லாகூர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த பாடகி ரபி பிர்சடா. இவர் தனது வீட்டில் பாம்புகள், முதலை நடுவில் பாம்பு ஒன்றை கையில் பிடித்தவாறு அமர்ந்தபடி, “நான் ஒரு காஷ்மீர் பெண். பாம்பு, முதலையுடன் இந்தியாவுக்கு வர தயாராக இருக்கிறேன். அவற்றை உங்களுக்கு பரிசாக அளிக்க உள்ளேன். காஷ்மீர் மக்களை நீங்கள் மிகவும் துன்புறுத்துகிறீர்கள். உங்களுக்காக என்ன கொண்டு வரப் போகிறேன் என்று பாருங்கள். என்னுடைய இந்த நண்பர்கள் உங்களுக்கு விருந்து அளிக்க போகிறார்கள். சாவதற்கு தயாராக இருங்கள்.

மோடி நரகத்திற்கு செல்ல வேண்டும். மோடியை போன்று நரகமும் மோசமானது,’’ என்று பேசியுள்ளார்.இந்த 50 வினாடி வீடியோவில் பாம்புகளை கையில் பிடித்தபடி பாம்பு, முதலைகளை அறிமுகப்படுத்தி அவர் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.

கடந்த வாரம் வெளியிட்ட இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதையடுத்து, அவர் மீது லாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதனிடையே, பாகிஸ்தான் பாடகியின் வீடியோ குறித்து நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். `இவை ஒவ்வொன்றும் 50 ரூபாய் வீதம் உங்கள் வீட்டின் அருகில் உள்ள சனிக்கிழமை சந்தையில் வாங்கியவை போல இருக்கின்றன’ என நெட்டிசன்கள் கிண்டலடித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here