மலாயாப் பல்கலைக்கழகம் பட்டதாரிகளுக்கு முதலிடம்

கோலாலும்பூர் – மலேசியாவின் முதலாவது பல்கலைக்கழகமாக இருந்து வரும் மலாயாப் பல்கலைக்கழகம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் முதலாம் இடத்தில் உள்ளது. பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பினை உருவாக்கி தரும் முன்னணி உயர்க் கல்வி நிலையமாக மலாயாப் பல்கலைக்கழகம் விளங்குகிறது. நாட்டின் பழமையான பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு சந்தையில் பிரதான இடத்தைப் பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் தொன்மையான பல்கலைக்கழகமாக விளங்கும் மலாயாப் பல்கலைக்கழகம் வரும் 2020ஆம் ஆண்டில் 141-150 தரத்திற்கு முன்னேறும் வேளையில் இங்கே படித்த பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதுவே சென்ற வருடம் 161-170 தரத்தில் இருந்தது குறிப்பிடதக்கது. QS Graduate Employability Rankings of 2020 என்ற அட்டவணை வரிசையில் முதல் இடத்தை மலாயாப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

மலாயாப் பல்கலைக்கழகத்திற்குப் பின் முறையே தெய்லர் பல்கலைக்கழகம், யூ.சி.எஸ்.ஐ. பல்கலைக்கழகம், யூ தார் பல்கலைக்கழகம்,  எம்.எஸ்.யூ, மலேசிய தேசிய பல்கலைக்கழகம், மலேசிய பகாங் பல்கலைக்கழகம், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம், மற்றும் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று உள்ளது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here