கோலாலம்பூர்:
சிலாங்கூர், கெப்போங், தாமான் புக்கிட் டேசா பகுதியில் ராணுவ பாணி சீருடை அணிந்து கொண்டு, போலித் துப்பாக்கி போன்ற பொருளொன்றை ஏந்தியபடி நடமாடும் நபர் ஒருவரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து, கோம்பாக் காவல்துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
குற்றவியல் சட்டம் பிரிவு 140 மற்றும் 1960 ஆயுதச் சட்டம் பிரிவு 36 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கோம்பாக் மாவட்டப் போலிஸ் தலைவர் ஏசிபி இப்ராஹிம் ஹுசின் தெரிவித்துள்ளார்.
15 வினாடிகள் ஓடக்கூடிய இக்காணொளி குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள் காவல் அதிகாரியைத் தொடர்பு கொண்டு உதவலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






















