பெல்ஜியம் ஹாக்கி தொடர் இந்திய அணியில் மீண்டும் ரூபிந்தர், லலித்குமார்

புதுடெல்லி – பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு எதிராக ஹாக்கி டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஹாக்கி அணி பெல்ஜியம் அணிக்கு எதிராக 3 போட்டிகளிலும், ஸ்பெயின் அணிக்கு எதிராக 2 போட்டிகளிலும் விளையாட உள்ளது. இம்மாதம் 26ம் தேதி தொடங்கி அக்டோபர் 3ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மன்பிரீத் சிங் தலைமையில் மொத்தம் 20 வீரர்கள் அடங்கிய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூபிந்தர் பால் சிங், லலித்குமார் உபாத்யாய் இருவரும் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.

கோல் கீப்பர்கள்: பி.ஆர். ஸ்ரீஜேஷ், கிரிஷண் பதக்.தற்காப்பு: ஹர்மான்பிரீத் சிங் (துணை கேப்டன்), சுரேந்தர் குமார், பிரேந்திரா லாக்ரா, வருண் குமார், அமித் ரோகிதாஸ், குரிந்தர் சிங், கோதஜித் சிங், ரூபிந்தர் பால் சிங். நடுகளம்: மன்பிரீத் சிங் (கேப்டன்), ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட ஷர்மா.முன்களம்: மன்தீப் சிங், எஸ்.வி.சுனில், லலித் குமார் உபாத்யாய், ரமன்தீப் சிங், சிம்ரன்ஜீத் சிங், ஆகாஷ்தீப் சிங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here