கோலாலம்பூர் – 20 மாதக் குழந்தையைக் கொன்றதாக 4 இளம் வயதினர் கைது செய்யப்பட்டனர்.
அச்சம்பவம் செம்போர்னா, பும் பும் தீவின் கம்போங் ஏகாங் ஏகாங் எனும் இடத்தில் நடந்ததாகவும், தாயார் ஒருவர் வெளியே செல்ல வேண்டியிருந்ததால், தனது வீட்டில் குடியிருந்த நால்வரிடம் தமது குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
குழந்தை அழுது கொண்டிருந்ததைப் பொறுக்க முடியாத அதில் ஒரு நபர் அதனை கன்னத்தில் அறைந்து, தூக்கி கட்டிலில் தூக்கிப் போட்டிருக்கிறார்.
பின்னர், அதே நபர் குழந்தையின் தலையைப் படுக்கையின் இரும்புக் சட்டத்தில் மோதியுள்ளார். மற்றொரு நபர் குழந்தையின் பின்புறத்தில் காலால் அழுத்தியுள்ளதாக செம்போர்னா போலீஸ் தலைவர் சாபாருடின் ரஹ்மாட் தெரிவித்தார்.
வீட்டுக்குத் திரும்பிய 23 வயது தாயார், குழந்தை செயலற்று கிடந்ததைப் பார்த்து, செம்போர்னா மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு 6 மணி நேரத்துக்குப் பின்னர், குழந்தை இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், 7.30 மணிக்கு தாயார் புகார் அளித்த புகாரைதி தொடர்ந்து, அந்த நால்வரும் கைது செய்யப்பட்டு அச்சம்பவம் கொலை என வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.