கோலாலம்பூர்,
புத்ராஜெயாவை தொடர்ந்து வழிநடத்த வேண்டுமானால், எதிர்கட்சிகளுடன் குறிப்பாக, தங்களுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க முன்வர வேண்டுமென பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு அம்னோ பரிந்துரையை முன்வைத்துள்ளது.
பக்காத்தான் ஹாராப்பானை மக்கள் நிராகரித்துள்ளனர். அமைச்சரவையில் மாற்றத்தை மேற்கொண்டாலும், வெகுவாக குறைந்துள்ள மக்களின் ஆதரவை அக்கூட்டணியால் மீண்டும் பெற முடியாது என பிரதமர்துறையின் முன்னாள் அமைச்சரான டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியினர் உள்பட தகுதியுடையவர்களைக் கொண்டு, துன் டாக்டர் மகாதீர் வலுவான அரசாங்கத்தை அமைக்க விரும்பினால், அவருக்கு ஆதரவளிக்க தாம் தயார். மக்கள் அமைச்சர்களை வெறுக்கவில்லை. மாறாக, அரசாங்கத்தையே வெறுக்கின்றனர். ஆகையால், அமைச்சரவையில் எதிர்கட்சியினர் இடம்பெறம் வகையில், அவர்களுகு அழைப்பு விடுப்பதற்கு இதுவே சரியான காலம்.
துன் மகாதீர் சிறந்த பிரதமர்களில் ஒருவராக திகழ்கிறார். ஆயினும், அவரை மோசமான அமைச்சர்கள் சூழ்ந்திருப்பதாகவும் டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம் கூறியுள்ளார்.