கோலாலம்பூர்:
இன்று திங்கட்கிழமை (நவம்பர் 25) தொடங்கி தீபகற்ப கிழக்குப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து கிளந்தான், திரெங்கானு மற்றும் பகாங்கில் உள்ள பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளுக்கும் மஞ்சள் எச்சரிக்கையை மலேசிய வானிலை மையம் விடுத்துள்ளது.
அதன் இயக்குனர் ஜெயிலான் சைமன் கூறுகையில், பகாங்கில் ஜெராந்துட், மாரான், குவந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படலாம் என்று கூறினார்.
“புயலைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், 3.5 மீட்டர் உயரத்திற்கு அலைகளும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நவம்பர் 25 முதல் 27 வரை (புதன்கிழமை) இந்த வானிலை எச்சரிக்கை அமலில் இருக்கும்.”
“கூடுதலாக, இந்த காலகட்டத்தில் அதிக அலைகளைத் தொடர்ந்து கடல் மட்ட உயர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடலோர நீர் மற்றும் நதி கரையோரங்கள் நிரம்பி வழியும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்” என்று அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.