அன்வார் பிரதமர் ஆவாரா?

கோலாலம்பூர், டிங். 2-

கெஅடிலான் கட்சியில் வெடித்திருக்கும் பனிப்போர் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருக்கிறது. இதனால் நாட்டின் 8ஆவது பிரதமராகும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கனவுக்குப் பெரும் ஆபத்து ஏற்படலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதே வேளையில் அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இளைஞரணியைச் சேர்ந்த சில தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி இருக்கின்றனர்.

கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மினின் நம்பிக்கைக்குரிய தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்த பகாங் மாநிலம் பெரா கெஅடிலான் தொகுதித் தலைவர் ஸக்காரியா அப்துல் ஹமிட் கடந்த வாரம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கு அஸ்மின், ஸுராய்டா கமாருடின், தியான் சீவா உட்பட 20 எம்பிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் வரும் டிசம்பர் 5, 6ஆம் தேதிகளில் மலாக்கா நகரில் கெஅடிலான் மாநாடு நடைபெறுகிறது.

அன்வாருக்கும் அஸ்மினுக்கும் இடையிலான போட்டாப் போட்டி கட்சியையே சிதறடித்து விடும் என்று தாஸ்மானியா ஆசிய பல்கலைக்கழகக் கல்லூரியின் விரிவுரையாளர் ஜேம்ஸ் சின் எச்சரிக்கிறார். இந்த நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். இல்லையேல் துன் டாக்டர் மகாதீருக்கு அடுத்து பிரதமராகும் அன்வாரின் கனவு நிறைவேறாமல் போய்விடும் என்று யூனிவர்சிட்டி டெக்னோலோஜி மலேசியா பல்கலைக்கழகத்தின் அரசியல் விரிவுரையாளர் அஸ்மி ஹசான் கூறுகிறார்.
இதனிடையே, அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இளைஞரணித் தலைவர்களுள் சிலர் நெருக்குதல் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

லெம்பா பந்தாய் கெஅடிலான் இளைஞரணி துணைத்தலைவர் நஸ்ரின், செயலவை உறுப்பினர்கள் முகமட் நோர், முகமட் பைசால், முகமட் யாசிட், சபாவில் உள்ள சண்டக்கான் தொகுதி இளைஞரணி செயலாளர் ஐசெக் வோங் ஆகியோர் போர்க்கொடி உயர்த்துகின்றனர். 5, 6ஆம் தேதிகளில் மலாக்கா நகரில் கெஅடிலான் மாநாடு நடைபெறுகிறது.

அன்வாருக்கும் அஸ்மினுக்கும் இடையிலான போட்டாப் போட்டி கட்சியையே சிதறடித்து விடும் என்று தாஸ்மானியா ஆசிய பல்கலைக்கழகக் கல்லூரியின் விரிவுரையாளர் ஜேம்ஸ் சின் எச்சரிக்கிறார். இந்த நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். இல்லையேல் துன் டாக்டர் மகாதீருக்கு அடுத்து பிரதமராகும் அன்வாரின் கனவு நிறைவேறாமல் போய்விடும் என்று யூனிவர்சிட்டி டெக்னோலோஜி மலேசியா பல்கலைக்கழகத்தின் அரசியல் விரிவுரையாளர் அஸ்மி ஹசான் கூறுகிறார்.
இதனிடையே, அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இளைஞரணித் தலைவர்களுள் சிலர் நெருக்குதல் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

லெம்பா பந்தாய் கெஅடிலான் இளைஞரணி துணைத்தலைவர் நஸ்ரின், செயலவை உறுப்பினர்கள் முகமட் நோர், முகமட் பைசால், முகமட் யாசிட், சபாவில் உள்ள சண்டக்கான் தொகுதி இளைஞரணி செயலாளர் ஐசெக் வோங் ஆகியோர் போர்க்கொடி உயர்த்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here