மிஸ் யூனிவர்ஸ் அழகு ராணியாக தென்னாப்பிரிக்க மங்கை தேர்வு

அட்லாண்டா –

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நேற்று நடைபெற்ற இவ்வாண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் உலக அழகிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஸோசிபினி துன்ஸி என்பவர் வெற்றி பெற்றார்.

இரண்டாவது இடத்தை பியர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த மெடிசன் ஆண்டர்சனும் மூன்றாவது இடத்தை மெக்சிகோவைச் சேர்ந்த சோபியா ஆர்கனும் பெற்றனர். இருபத்தாறு வயதான துன்ஸி சமூக விவகாரங்கள் பற்றிய கேள்விகளுக்கு மிக நேர்த்தியாக பதிலளித்து நடுவர்களைக் கவர்ந்தார்.

இவ்வாண்டின் மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டி அறுபத்தெட்டாம் ஆண்டாக நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here