ஏமனின் மசூதி மற்றும் மதப்பள்ளியில் ஏவுகணைத் தாக்குதல் ; குழந்தைகள் உட்பட 29 பேர் பலி

ஏமனில் இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரச படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரச படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது.

இந்த உள்நாட்டுப் போர் காரணமாக ஏமனில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், அந்நாட்டின் மரிப் மாகாணத்தில் உள்ள மசூதி மற்றும் மதப்பள்ளியை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று இரண்டு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மசூதி மற்றும் மதப்பள்ளியில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 29 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here