மரத்தாண்டவர் ஆலயத்தை வெள்ளம் சூழ்ந்தது!

மாரான் –

பலத்த மழையால் மாரான், ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தை வெள்ளம் சூழ்ந்தது. ஜெரிக் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியதால் ஆலயமும் பாதிக்கப்பட்டது என ஆலயத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.

ஆலயத்தைச் சுற்றிலும் வெள்ளம் ஏற்பட்டதால் அங்குள்ள சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் சில பகுதிகளில் இரண்டு மீட்டர் உயரத்திற்கு நீர் உயர்ந்தது. ஆனால், பூஜை நடக்கும் இடத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆலயத்தில் வழக்கம் போல் பூஜைகள் நடப்பதாக அவர் சொன்னார்.

ஆனால், வெள்ளம் காரணமாக பக்தர்கள் அங்கு வரமுடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here