இதுதான் வேலைக்கு வர்ற நேரமா? – எடியூரப்பா

பெங்களூரு –

கர்நாடகாவில் தலைமைச் செயலகத்துக்கு வந்த முதல்வர் எடியூரப்பா, அங்கு காலை 10.30 மணிக்கு கூட வராத அதிகாரிகளுக்கு செம்ம டோஸ் விட்டதோடு வேலைக்கு சரியான நேரத்திற்கு வர முடியாவிட்டால் ரஜினாமா செய்துவிட்டு போங்க என்று கண்டித்தார்.

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவி ஏற்ற நாள் முதலே பல அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார். அங்கு பணிபுரியும் துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்து எப்படி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து விவாதித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தலைமைச் செயலகத்துக்கு வந்த பொதுமக்கள், சமூக நலத்துறை அதிகாரிகளை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்தனர். இந்த விவகாரம் எடியூரப்பாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து அதிரடி ஆய்வுக்காக காலை 10.15 மணிக்கே தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் எடியூரப்பா வந்தார். தனது அறையில் இருந்து சமூக நலத்துறை, பொதுப் பணித் துறை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சில ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். உயர் அதிகாரிகள் வரவில்லையா என்று அவர்களிடம் எடியூரப்பா கேட்டுள்ளார்.

ஆனால் ஊழியர்கள் இன்னும் வரவில்லை என்று பதில் அளித்துள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த எடியூரப்பா அங்கிருந்த ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டு அதிகாரிகளின் வருகைக்காக காத்திருந்தார். முதல்வர் காத்திருக்கிறார் என்பதை அறியாமல் சாவகாச மாக காலை 11 மணிக்கு அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்துள்ளார்கள்.
அங்கு முதல்வர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் பதறிப்போயினர். அவர்களை பார்த்து ஆத்திரம் அடைந்த முதல்வர் எடியூரப்பா இதுதான் வேலைக்கு வரும் நேரமா? உயர் அதிகாரிகளான நீங்களே இப்படி தாமதமாக வந்தால் மற்ற ஊழியர்கள் எப்படி சரியான நேரத்திற்கு வேலைக்கு வருவார்கள் என்று கடிந்து கொண்டார்.
அதிகாரிகளை உரிய நேரத்தில் வேலைக்கு வர முடியவில்லை என்றால் வேலையை ராஜினாமா செஞ்சுட்டு போயிடுங்க என்று கடுமையாக எச்சரித்தார்.
சரியான நேரத்திற்கு நீங்கள் வந்தால் ஏன் பொதுமக்கள் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட போகிறது என்று முதல்வர் கேள்வி எழுப்பினார்.
இனியாவது சரியான நேரத்திற்கு வர வேண்டும். இல்லாவிட்டால் வேலையில் இருக்க வேண்டாம்.
வீட்டுக்கு போங்க என்று கடுமையாக கண்டித்துவிட்டு அங்கிருந்து முதல்வர் எடியூரப்பா புறப்பட்டு சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here