கோலாலம்பூர்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் வரி விதிப்பு கொள்கைகள் மீது மீண்டும் தனது கடும் விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.
பல ஆண்டுகளாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒருதலைப்பட்சமான (lopsided) வர்த்தக உறவு நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். “நாங்கள் இந்தியாவுடன் நல்ல உறவில் இருக்கிறோம்… ஆனால், இந்தியா எங்களிடம் மிகப்பெரிய வரிகளை வசூலித்து வருகிறது, ஆனால் நாங்கள் முட்டாள்தனமாக அவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவுகள், சில துறைகளில் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், இரு நாடுகளும் பல முக்கிய சர்வதேச விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற துறைகளில் இரு நாடுகளின் உறவும் வலுப்பெற்றுள்ளது. ஆனாலும், வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் வரி விதிப்புகள் குறித்த டிரம்ப்பின் விமர்சனங்கள் இரு நாடுகளின் பொருளாதார உறவில் தொடர்ந்து சவால்களை ஏற்படுத்தி வருகின்றன.





















