சபரிமலை சென்ற தமிழகப் பேருந்து விபத்து: ஒருவர் பலி, 17 பேர் காயம்!

திருப்பூர் –

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். குறிப்பாக மகரவிளக்கு பூஜையை காண அதிகளவில் பக்தர்கள் சென்றவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் திருப்பூரில் இருந்து திங்கட்கிழமை அன்று ஐயப்ப பக்தர்கள் சிலர் பேருந்து மூலம் சபரிமலைக்கு சென்றிருந்தனர். இவர்களது பேருந்து எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லோரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் திருப்பூரைச் சேர்ந்த தர்மலிங்கம் என்று கூறப்படுகிறது. மேலும் பேருந்தில் சென்ற 17 ஐயப்ப பக்தர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் ஒரு பக்தரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எர்ணாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here