அதிமுகவில் விலகி திமுகவில் இணையும் 2 லட்சம் பேர்!

சென்னை –

தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து ராஜ கண்ணப்பன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பின்னர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. எனது தலைமையில் சுமார் 2 லட்சம் பேர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளோம். இந்த இணைப்பு விழா மதுரையில் மிக பிரமாண்டமாக வருகிற பிப்ரவரி மாதம் இறுதியில் நடைபெறும் என தெரிவித்தார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியாக அதிமுக இருந்தும் தோல்வி அடைந்ததால் வேட்பாளர்கள், தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப் படுகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலால் சீட் கிடைக்காதவர்கள் அதிமுகவை விட்டு வெளியேறவும் தயாராகி வருவதாகவும் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here