துன் மகாதீர் இடைக்காலக் கல்வியமைச்சர்

பெட்டாலிங் ஜெயா –

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது ஜனவரி 3 தொடக்கம் இடைக்காலக் கல்வி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஒரு புதிய கல்வியமைச்சர் தேர்வு செய்யப்படும் வரை அவர் அப்பதவியில் நீடிப்பார் என்று நேற்று வெளியிடப்பட்ட பிரதமர் இலாகாவின் ஓர் அறிக்கை தெரிவித்தது.

ஜனவரி 8 புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் ஜனவரி 2ஆம் தேதி அப்பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து டாக்டர் மகாதீர் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்
பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here