லெபனானில் கலவரம்: 35 பேர் காயம்!

பெய்ரூட் –

லெபானின் பெய்ரூட் நகரிலுள்ள பிரதான போலீஸ் முகாமொன்றுக்கு முன்புறம் அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நிகழந்த மோதலில் முப்பத்தைந்து பேர் காயமுற்றனர். அதன் தொடர்பில் இருபது பேர் கைது செய்யப்பட்டனர்.

காயமடைந்தவர்களுள் ஆர்ப்பாட்டக்காரர்களும் போலீஸ்காரர்களுக்கும் அடங்குவார்கள். ஆயினும், அவர்கள் எவரும் பலத்த காயங்களுக்கு ஆளாகவில்லை என்று லெபனான் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜார்ஜ் கென்னத் தெரிவித்தார்.
பெய்ரூட்டில் எல்-ஹெலோ போலீஸ் முகாமுக்கு வெளியே புதன்கிழமை இரவில் திரண்ட போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக காவல்படை வீரர்கள் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பாய்ச்சினர். இதனால் சினமடைந்த போராட்டக்காரர்களும் போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.

முதல் நாளான செவ்வாய்க்கிழமையன்றும் போராட்டக்காரர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நிகழ்ந்தன. பெய்ரூட்டின் ஹாமா வீதியில் மத்திய வங்கிக்கு அருகில் போடப்பட்டுள்ள இரும்பு வேலிகளை அகற்றுவதற்கு போராட்டக்காரர்கள் முயன்றபோது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது.

லெபானில் ஆளும் வர்க்கத்தினரை எதிர்த்தும் நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியைக் கண்டித்தும் பொதுமக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here