மதுரை –
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் கலாச்சாரமும் வாழ்வியலும் தம்மை வியப்பில் ஆழ்த்தியதாக அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக கல்வித்துறை தலைவர் டாக்டர். டில்லிஸ் டீ ஆன்டோனியோ தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள அவர், மதுரை தமிழ்ச் சங்கத்தில் உள்ள கீழடி தொல்பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.
தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் கீழடிக்குச் சென்ற டாக்டர் டில்லிஸ் டீ ஆன்டோனியோ குழுவினர், அகழாய்வு களத்தை பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் டில்லிஸ் டீ ஆன்டோனியோ, தமிழர்களின் தொன்மை, நாகரிகம் குறித்தும் வாழ்வியல் குறித்தும் அமெரிக்கா சென்றபின் தனது மாணவர்களுக்கு எடுத்துரைக்க உள்ளதாகக் கூறினார்.