போரில் மாயமான 20,000 தமிழர்கள் இறந்துவிட்டனர்

கொழும்பு –

போரில் மாயமான 20 ஆயிரம் ஈழத் தமிழர்களும் உயிரிழந்துவிட்டனர் என்று இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

கடந்த 2008 மே மாதம் இலங்கையில் உச்சக்கட்டப் போர் நிகழ்ந்தது. இறுதிக்கட்டப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் உயிரிழந்தனர்.

இந்தப் போரின்போது 20 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போய்விட்டனர். அவர்கள் ராணுவத்தின் வசம் இருப்பார்கள் என்று உறவினர்கள் நம்புகின்றனர்.

மாயமானவர்களின் உண்மை நிலை என்ன என்பது குறித்து அரசாங்கம் அறிவிக்க வேண்டுமென்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் இது தொடர்பாக அதிபர் கோத்தபாய ஓர் அறிக்கை வெளியிட்டார்.

இலங்கையில் 30 ஆண்டுகளாக நிகழ்ந்த போரில் மாயமான 20 ஆயிரம் ஈழத் தமிழர்கள் இறந்துவிட்டனர் என்றார் அவர்.

காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்டிருப்பது இதுவே முதன் முறை. இதனால் மாயமானவர்களின் உறவினர்களும் மனித உரிமை போராளிகளும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here