பாட்னா, பீகாரில் திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை பைக்கில் தரதரவென இழுத்துச் சென்ற காதலனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
திருமண விவகாரத்தில் மோதல்
பீகார் மாநிலம் நவாடா பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நார்திகஞ்ச் மண்டல அலுவலகத்தில் அரசு அளவையர் ஆகப் பணியாற்றி வருகிறார். அவரும் ஒரு இளம்பெண்ணும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அந்த வாலிபர் தனிப்பட்ட காரணத்தால் அந்த பெண்ணை புறக்கணித்து வந்தார்.
இதையடுத்து அந்த பெண் நாலந்தா மாவட்டம் ராஜ்கிர் பகுதியில் உள்ள வேணுவன் அருகே காதலனை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால், அதற்கு அந்த இளைஞர் மறுப்பு தெரிவித்து, அங்கிருந்து தனது பைக்கில் தப்பிக்க முயன்றார்.









