உங்களது வாழ்க்கையை மாற்றும் குலதெய்வ மந்திரம்

உங்களது வாழ்க்கையை சாபமாக நினைக்கிறீர்களா? வரமாக மாற்றும் குலதெய்வ மந்திரம். வாழும் வாழ்க்கையை சாபமாக நினைத்து வாழ்பவர்களும் இந்த பூமியில்தான் இருக்கின்றார்கள். அதே வாழ்க்கையை வரமாக நினைத்து வாழ்பவர்களும் இந்த பூமியில் தான் இருக்கின்றார்கள். அவரவரின் விதி, தலையெழுத்து என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதை மாற்றக்கூடிய சக்தி என்பது மனிதர்களது கையில் இல்லை. ஆனால் நாம் வழிபடும் வழிபாட்டின் மூலம் ஒருவரின் வாழ்க்கையை வரமாக நம்மால் நிச்சயம் மாற்ற முடியும்.
எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருந்தாலும் அதற்கான தீர்வினை இறைவன் நமக்காக தந்து இருப்பார். அதை நாம் சரியான வழியில் முயற்சி செய்து தேடி கண்டுபிடிப்பதில் தான் நம் வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை நாம் எல்லோரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இப்படியாக ஒருவருக்கு வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பண கஷ்டம், எவ்வளவு பெரிய மன கஷ்டம் இருந்தாலும் அதை சரிசெய்ய தினம் தோறும் குலதெய்வ மந்திரத்தை சொல்லி குலதெய்வ வழிபாட்டினை மனதார செய்தாலே பிரச்சனையில் ஒரு பாதையினை நம்மால் சரி செய்து விட முடியும் என்று கூறுகிறது சாஸ்திரம்.
முதலில் குலதெய்வம் என்றால் என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்? அதாவது 64 தலைமுறைக்கு முன்னதாக நம் பரம்பரையில் இருந்தவர்கள்தான் குலதெய்வ ரூபத்தில் இருந்து நம் குலத்தை காப்பதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இப்படி நம் முன்னோர்களின் ஆத்மாக்கள் அனைத்தும் சேர்ந்ததுதான் நம் குலதெய்வம். இப்படிப்பட்ட குலதெய்வம் தான் நம் குலத்தை காத்து வருகிறது. நம்முடைய அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என்று சொன்னாலே அவரவர் குடும்பத்தின் மீது அவரவர் எவ்வளவு பாசமும் பற்றும் வைத்திருப்பார்கள்? இப்படி இருக்க நம் முன்னோர்கள் அனைவரும் சேர்ந்து நம் குடும்பத்தை பாதுகாத்தால் நமக்கு எப்படி கஷ்டம் ஏற்படும்? இதனால் தான் குலதெய்வ வழிபாட்டை மறக்காதீர்கள் என்று வழிவழியாக காலம் காலமாக கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.
இவ்வளவு பெருமைகளைக் கொண்ட நம் வீட்டு குலதெய்வத்திற்கு என்று ஒரு பெயர் இருக்கும். உங்களது குலதெய்வம் முருகனாக இருந்தால் ‘ஓம் முருகப்பெருமானே நம’ என்ற மந்திரத்தை தினம்தோறும் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து, முகம் கை கால்களை கழுவி, பூஜை அறையில் அமர்ந்து, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து நாம் எந்த ஒரு செயலை தொடர்ந்து செய்து வந்தாலும் அதற்கான வெற்றி நிச்சயம் உண்டு. 108 முறை உங்களது குலதெய்வம் மந்திரத்தை உச்சரித்து விட்டு அதன் பின்பு குலதெய்வத்தின் அருளைப் பெற பின்வரும் மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
குலதெய்வம் அருள் கிடைக்க மந்திரம்:
ரோகாச் சோகாச் ச தாரித்ர்யம் தெளர்பல்யம் சித்தவிக்ரியா நச்யந்து குலதேவஸ்ய சக்தி மந்த்ரேண தாடிதா
இதன் பொருள்: பிணி, துக்கம், வறுமை, பலவீனம், மனநோய், இவற்றையெல்லாம் என்னை அண்டாமல் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த மந்திர கட்டாக இருக்கும் குலதெய்வமாகிய உன்னை வணங்குகின்றேன். இப்படியாக மனமுருகி எவரொருவர் குலதெய்வத்தை தினம்தோறும் வழிபடுகிறாரோ அவரது வாழ்க்கை நிச்சயம் வரமாக தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here