இதுதான் முஹிடினின் அமைச்சரவைப் பட்டியல் துணைப்பிரதமர் பதவியில் யாரும் கிடையாது

டான்ஸ்ரீ மொகிதீன் யாசினின்

புத்ரா ஜெயா, மார்ச் 9-
மலேசியப் பிரதமர் அமைச்சரவைப் பட்டியல் சற்று முன்னர் (மலேசிய நேரம் மாலை 5.20) வெளியிடப்பட்டது.

புதிய அமைச்சரவைப் பட்டியலில் துணைப்பிரதமர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடியோ, இஷாமுடின் துன் உசேனோ, முக்ரிஸ் மகாதீரோ அல்லது பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங்கோ துணைப்பிரதமர் பதவிக்கு வரலாம் என்ற நிலையில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

மலேசிய அரசியல் சதிராட்டத்தை நன்கு உணர்ந்தவர் போல பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் செயல்பட்டிருப்பதை அவரது புதிய அமைச்சரவைப் பட்டியல் காட்டுகிறது.

அமைச்சர்களும் அவர்கள் சார்ந்த அமைச்சுகளும் இதோ:

முகமட் அஸ்மின் அலி – அனைத்துலக தொழில்துறை அமைச்சு
இஸ்மாயில் சப்ரி யாக்கோப் – தற்காப்பு
ஃபடிலா யூசோப் – பொதுப்பணித்துறை
முகமட் ரட்சி மாட் சின் – கல்வி
முஸ்தபா முகமட்- பிரதமர் துறை (பொருளாதாரம்)
ரிடுவான் யூசோப்- பிரதமர் துறை (சிறப்பு ஙெ்யலாக்கம்)
தாக்கியுடின் ஹசான்- பிரதமர் துறை(சட்டம்)
மெக்சிமஸ் ஒங்கிலி- பிரதமர் துறை (சபா/சரவா விவகாரம்)
சுல்கிப்ளி முகமட் அல்பக்ரி- பிரதமர் துறை (இஸ்லாமிய விவகாரம்)
தெங்கு ஸாப்ருல் அசீஸ்- நிதி
ஹம்சா ஸைனுடின்- உள்துறை
ஹிஷாமுடின் துன் உசேன்- வெளியுறவு
ரோனல்டு கியாண்டி- விவசாயம், விவசாய தொழில்துறை
சைபுடின் அப்துல்லா- தகவல் பல்லூடகம்
வீ கா சியோங்- போக்குவரத்து
டாக்டர் அடாம் பாபா- சுகாதாரம்
துவான் இப்ராஹிம் துவான் மான்- சுற்றுச்சூழல்
நோராய்னி அமாட்- உயர்கல்வி
அனுவார் மூசா- கூட்டரசுப் பிரதேசம்
டத்தோ சரவணன் முருகன்- மனிதவளம்
ரீனா ஹருண்- மகளிர் குடும்ப மேம்பாடு
சுராய்டா கமாருடின்- வீடமைப்பு ஊராட்சி
கைரி ஜமாலுடின் – அறிவியல் தொழில்நுட்பம்
சம்சீல் அனுவார் நசாரா- எரிசக்தி / இயற்கை வளம்
அப்துல் லத்திப் அமாட்- கிராமப்புற மேம்பாடு
நான்சி சுக்ரி- சுற்றுலா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here