செகிஞ்சான் வட்டாரத்தில் மீன் விலை வரலாறு காணாத வீழ்ச்சி!

மீன் விலை வரலாறு காணாத வீழ்ச்சி!

தஞ்ங்சோங் காராங்,மார்ச் 10-
செகிஞ்சான், தஞ்ங்சோங் காராங் வட்டாரங்களில் உள்ள அனைத்து சந்தைகளிலும் கெம்போங், சென்சாரு வகை மீன்களின் விலை வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது.

கிலோ 12 வெள்ளி என இதுநாள் வரையில் விற்கப்பட்டு வந்த கெம்போங் மீன் ஐந்து மடங்கு மலிவான விலைக்கு விற்கப்படுகிறது. சென்சாரு மீன்கள் கிலோ 2 வெள்ளி 50 காசுகளுக்கு விற்கப்படுவதால் வட்டார மக்கள் சந்தையைத் தேடி ஓடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மைய காலமாக கெம்போங் மீன்கள் தென் சீனக் கடல் பகுதியில் மிக அதிகமாகக் கிடைப்பதால் மீனவர்கள் அதனை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வியாபாரிகளும் குறைந்த விலைக்கு மீன்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

வலையை விரிக்கும்போதெல்லாம் கெம்போங் மீன்களும் சென்சாரு மீன்களும் அதிகமாகச் சிக்குவதால் கரைக்கு இவை அதிகமாகக் கொண்டு வரப்படுகிறது.

கோலசிலாங்கூர், கிள்ளான், ஊத்தான் மெலிந்தாங், தெலுக் இந்தான் லுமுட், பாரிட் புந்தார் போன்ற கோலமூடா போன்ற கரையோர நகர மக்களும் குறிப்பிட்ட காலம் வரையில் குறைந்த விலைக்கு மீன்களை வாங்கக் கூடிய யோகம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here