சென்னை, தமிழகத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்ட விமான சேவைகளை, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முழுவதுமாக நிறுத்தியுள்ளது. இந்திய விமான போக்குவரத்து துறையில் குறைந்த கட்டண விமான சேவையாக அறிமுகமான ஸ்பைஸ்ஜெட், 2005 ஆம் ஆண்டு மே மாதம் தனது அகில இந்திய சேவையை தொடங்கிய சில மாதங்களிலேயே சென்னை சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும் உள்நாட்டு சேவைகளை தொடங்கியது.
ஸ்பைஸ்ஜெட் தனது முதல் சர்வதேச விமான சேவைகளில் ஒன்றை அக்டோபர் 2010-ல் சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு வழித்தடத்தில் வெற்றிகரமாக தொடங்கியது. பிற நகரங்களின் இணைப்பு (2011 – 2025): சென்னையை தொடர்ந்து தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களான மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கும், பின்னர் மார்ச் 2025-ல் தூத்துக்குடிக்கும் ஸ்பைஸ்ஜெட் தனது விமான சேவைகளை விரிவுபடுத்தி இயக்கி வந்தது.








