புதுடில்லி, மார்ச் 12-
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா தனது அனைத்து ரக பயணிகள் விசாவையும் ரத்து செய்துள்ளது. ராஜதந்திர உறவுகளுக்கான விசாவுக்கு மட்டுமே அனுமதி தொடர இதர அனைத்து ரக விசாக்களும் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி வரையில் இத்தடை அமலில் இருக்கும். என இந்தியா அறிவித்துள்ள அதே வேளையில மியன்மார் எல்லையும் இந்தியா தற்காலிகமாக மூடிவிட்டது. கொரோனா வைரஸ் நோய்த்தாக்கத்தால் 80 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளளதாக அறிவித்துள்ளது.