நிதானமாக வாய் திறந்திருக்கிறது சீன சமுகத்தின் இயக்கங்கள். அமைச்சரவை நியமனஙளுக்குபின் தங்கள் நிலைப்பாட்டை வெகு நிதானமாக சீனர் சமூக இயக்கங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
இன்னும் காலம் கடந்துவிடவில்லை என்பதும் அவர்களின் நம்பிக்கையாக இருக்கலாம்.
அமைச்சரவையில் தங்கள் பிரதிநிதித்துவம் போதாது என்ற பிடிவாதம் அவர்களின் குரலில் தெரிகிறது.
புதிய பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் அமைச்சர்களில் போக்குவரத்து அமைச்சராக மசீச தலைவர் வீ கா சியோங் , கட்சியின் துணைத் தலைவர் மா ஹங் சூன் துணைக்கல்வி அமைச்சராகவும் கட்சியின் உதவித்தலைவர் லிம் பான் ஹோங் உள்நாட்டு வாணிபம்,தொழில்துறை துணை அமைச்சராகவும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினர் வீ ஜேக் சியேங் தோட்டம், மூலப்பொருள் தொழில்துறை துணை அமைச்சராகவும் இருக்கின்றனர்.
இவர்களுக்கான பிரதி நிதித்துவம் போதவில்லை என்பதை வெகு நிதானமாக கூறியிருக்கின்றனர்.
இந்தியர்கள் இன்னும் நிதானத்துக்கே வரவில்லை என்பதில் இந்திய சமுதாயத்துக்குப் பெருத்த எமாற்றம் என்ற கருத்தையே பதிவு செய்கின்றனர் மஇகா அனுதாபிகள்
செனட்டர் டி.மோகனுக்கு ஒரு வாய்ப்பு ஏன் வழங்கியிருக்கக்கூடாது. இதற்கான வாய்ப்பைத் தரவேண்டும் என தேசியத்தலைவர் ஏன் குரல் எழுப்பவில்லை என்று மஇகா அனுதாபிகள் கேட்கின்றனர்.