கோலாலம்பூர், மார்ச் 14-
மருத்துவம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கான முதல் தொடக்க நிலையுடன் கூடிய அனைத்து வகை பரிணாம வளர்ச்சிக்கு முன்னோடியாக மாஹ்சா பல்கலைக்கழகம் திகழ்கிறது என்று அதன் வேந்தர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஹாஜி முகமது ஹனிஃபா பின் ஹாஜி அப்துல்லா தெரிவித்தார்.
பண்டார் செளஜானா புத்ராவில் அமைந்துள்ள மாஹ்சா பல்கலைக்கழகம் அதன் பிரதான தலைமையகமாக விளங்குகிறது.

மேலும் சபா, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவிலும் அதன் கிளைகள் உள்ளன.
மாஹ்சா பல்கலைக்கழகம் என்றுமே அறிவார்ந்தத் தனித்துவத்துடன் அனைத்து மாணவர்களிடையே உயர்கல்வி போதனை மட்டுமன்றி உலகத்தரமிக்க மிகச்சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்குவதே அதன் தலையாய நோக்கமாக உள்ளது.
மருத்துவம் மற்றும் அது சார்ந்த உயர்க்கல்வி கல்வித்துறையில் சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்கும் மாஹ்சா பல்கலைக்கழகம் அதில் தனித்துவத்துடன் விளங்குகிறது.
இப்போது எஸ்பிஎம் மாணவர்களுக்கான பதிவு நடைபெற்று வருகிறது.
கடந்த 17 வருடங்களுக்கும் மேலாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் பல்வேறுபட்ட பிரிவுகளில் மாஸ்டர், பிஎச்டி, பட்டம், டிப்ளோமா ஆகிய படிப்பை முடித்து தங்களது எதிர்காலத்தைத் தொடங்கி உள்ளனர்.
மாஹ்சா பல்கலைக்கழகத்தில் உள்ளூர், வெளியூர் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு விடுதியுடன் அனைத்து அடிப்படை தேவைகளுடன் உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் உள்ளன. மாணவர்களின் பயிற்சிகளுக்கும் பாடத் திறனை மேம்படுத்துவதற்கும் விரைவில் புதிதாக தனியார் மருத்துவமனை ஒன்று அமைக்கப்படவுள்ளது என்று டான்ஸ்ரீ முகமது ஹனிஃபா தெரிவித்தார்.