பண பரிவர்த்தனை பாதுகாப்பானதா? கீப் தி சேஞ் சரியானதா

பண பரிவர்த்தனை

அன்றாடவாழ்க்கை ஓட்டத்திற்கு பணப்பயன்பாடு இன்றியமையாததாக இருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. தெருவில் ரொட்டிக்காரர்முதல் பல வகை சிறுவணிகர்கள் செல்வதுண்டு.

இவர்களின் நடமாட்டத்தைப் பிள்ளைகள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். தெருமுனையில் சத்தம் கேட்டதும் யார் வருக்கிறார்கள் என்பது பிள்ளைகளுக்குத் தெரியும். ஐஸ்கிரீம் என்று அடம்பிடிக்கும் குழந்தைக்கு ஐஸ்கீரீம் வாங்கித்தருவதில் எந்த சிரமும் இல்லை.

ஐஸ்கிரீம் காரரும் மிக நாணயமாகவே நடந்துகொள்வார். ஐந்து வெள்ளியைக் கொடுத்தனுப்பினால் மீதத்தை முகச்சரியாகக் கொடுத்தனுப்புவதில் அவரின் நேர்மை இருக்கும்.

குழந்தைக்கு மீதப்பணத்தின் கணக்கு தெரியாது. ஆனால் கணக்காக வாங்கிவரத்தெரியும். குழந்தைக்குத் தெரியாது என்பதால் ஐஸ்காரர் ஏமாற்றுவதில்லை. ஒருவேளை, ஐஸ்கிரீம் விலையில் சின்ன மாற்றம் இருக்கலாம். பத்து காசீசு முதல் 20 காசு வித்தியாசம் ஒரு பொருட்டாகவும் இருக்காது.

இதில் என்ன பிரச்சனை ? என்றும் சிலர் வினவலாம். ஐஸ்கிரீம் விஷயத்தில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஐஸ்கிரீம் ஆரோக்கியத்திற்கு ஏற்றதா என்பதெல்லாம் பழைய கதை. அது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்பதும் பல பெற்றோர்களுக்குத் தெரியும்.தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல்தான் பல பெற்றோர்கள் ஐஸ்கிரீம் வாங்கித் தருகிறார்கள்.

குழந்தைகளுக்குக் கைப்பேசி ஆபத்தானது.பெற்றோர்களுக்கும் இது தெரியும். ஆனாலும் விளையாட்டுகளுக்காகக் கைப்பேசியைக் கொடுபதில்லையா? அதுபோலத்தான்.

இதில் முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது. ஐஸ்கிரீம் விற்பனையாளர் நல்லவர் என்பதிலும் ஐயமில்லை. அவர் திரும்பத்தரும் பணம் மதிப்பானதுதான். அதில் கொரோனா 19 தொற்று இல்லை என்பதை எப்படி யாரால் அறியமுடியும்? இதில் முதல் பாதிப்பு குழந்தையாகத் தானிருக்கும்.

பண பரிவர்த்தனையின் மூலம் கொரோனா 19 மட்டும் அல்ல, பலவித தொற்றுகள் இருக்க வாய்ப்பில்லை என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை. இருக்கலாம் என்பதில் மட்டும் ஐயப்பாடு உண்டு.

பணப் புழக்கத்தில் தொற்று இருக்கும். அது ஆபத்தானதாக இதுவரை இல்லை. இருந்திருக்கலாம், ஆனால், அறியப்படவில்லை.

குழந்தைகள் திடீர் சுகவீனம் அடைந்திருப்பார்கள். அதை அறிந்திருக்க மாட்டோம். ஆனால், நடைபயிலும் குழந்தைகள், ஓடி ஆடும் குழந்தைகளிடம் பணம் கொடுப்பது, பரிவர்த்தனை செய்வதில் ஆபத்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

கொரோனா 19 முற்றிலும் வெளியில் தெரிய 20 நாட்கள் ஆகுமாம். அதற்குள் அது தான் உருவாக்கப்பட்ட காரணத்தை செய்தே தீரும். பெரியோராயினும் இதற்கு விதிவிலக்கல்ல. வங்கிகளின் ஏடிஎம் மின்னியந்திரங்களிலும் இருக்கலாம்.
கையால் தொடும் அனைத்திலும் ஆபத்து காத்திருக்கிறது என்பதால் கவனமாக இருப்பது மிகவும் நல்லது என்ற ஆலோங்னையைத் தவிர்க்கமுடியாது. இது ஆலோசனைதான்.

இன்றைய டிஜிட்டல் முறை மிகவும் வரவேற்கத்தக்கது என்றாலும் சில்லரை வணிகத்திற்கு எப்படிப்பயன் படுத்துவது என்பதும் கேள்வியாகிவிடும். ஐந்து வெள்ளிக்கு சில்லரை இல்லையென்றால் கீப் தி சேஞ்ச் என்று எத்தனைபேரிடம் சொல்லமுடியும்.?

பேரங்காடிகல் பயன்படுத்தும் டிஜிட்டல்முறைக்கு மாறினால் நல்லது. மிகவும் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here