முத்தங்கள் முடங்கிவிட்டன

முத்தங்கள் முடங்கிவிட்டன

கோலாலம்பூர், மார்ச் 19-

எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் என்ற கவியரசு கண்ணதாசன் எழுதிய வரிகளை பொய்யாக்கி வருகிறது கொரோனா 19.

மூன்றடுக்கு மூச்சுக்கவசம் இல்லாமல் நடமாட முடியாத நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது என்று பல தலைவர்கள் மனமுடைந்து கிடக்கின்றனர்.

கடைக்கண் காட்டினாலும் காதலியைச் சந்திக்க முடியாமல் காதல் அவஸ்தைக்கு ஆளாக்கிவிட்டது கொரோனா 19.

சீனாவில் இருந்த கொரோனா 19 சிங்கப்பூருக்கும் மலேசியாவுகும் வர விசா அனுமதிக்கப்படவில்லை என்கிறார்கள். இருந்து ஏன் வந்தாய் என்கிறவர்களாய் காளையர்கள் கதறுகின்றனர்.

நீதான் என் மூச்சு என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? சொல்லாதே யாரும் கேட்டால் என்றுதான் பதில்வரும்.
முத்தத்திற்கு மொத்தமாய் தடைவிதித்ததுபோல் ஆகிவிட்டது என்ற கவலையில் இருப்போர்க்கு விரோதியாய் மாறியிருக்கிறது கொரோனா 19 கட்டுப்பாடு அவசியம் என்பதை கொரோனா 19 உணர்த்தியிருக்கிறது. தட்டுப்பாடு வரும் என்பதற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

பலர் பிரிந்து வந்து வேலையில் இருந்திருப்பார்கள். விடுமுறை கிடைக்கவில்லை என்று இனி சொல்வதற்கில்லை. ஊர் சுற்றாமல் வந்து சேருங்கள் என்ற கட்டளைகளை முகநூல்கள் எரிச்சலுடன் பதிவு செய்துகோண்டே இருக்கின்றன.

போய்ச்சேரும்வரை கைப்பேசிக்கு வேலை அதிகம்.அதற்கு சுடேறிவிட்டது.
சராசரி உடலின் வெப்பநிலை 37 பாகைதான். கைப்பேசியின் வெப்பம் அதிகமாகிவிடுவதால் அதற்கும் கொரோனா இருக்குமோ? அப்படியிருக்க வாய்ப்பில்லை இருதரப்பின் பேச்சயைும் ஒன்றாக இணைக்கும்போது வெப்பம் அதிகமாகத்தானே இருக்கும். இரண்டையும் சேர்த்து 74 பாகையாக இருந்தாலும் கொரோனா 19 பாதிப்பு இருக்காது.

இரண்டு வாரத்தில் வீட்டோடு இருக்க வேண்டும் என்பதால் கட்டிப் போட்டதுபோல் இருக்கவேண்டும். அரசு ஆணையை கடைப்பிடிக்கவேண்டும். அதுதான் கட்டளை. அதை கடைப்பிடிப்போம் என்ற பதிலைத்தான் கைப்பேசி அனுப்புகிறது.

கொரோனாவிலும் கண்ணியம் காப்போம் என்ற பதிலோடு கைப்பேசி ஓய்வெடுத்துகொள்கிறது. மின்கலம் சக்தியிழந்துவிடுவதால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here