பாதுகாப்பு இல்லங்களில் பாதுகாப்பு

முதியோர் ஆசிரமம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 21-

பாதுகாப்பு இல்லங்களில் தங்கியிருக்கும் மூத்த குடிமக்களைச் சந்திக்கின்றவர்கள் உள்ளே அனுமதிக்கபடமாட்டார்கள் என்று பராமரிப்பபாளர் சங்கத்தின் தெல்ரன் தெரன்ஸ் டக்ளஸ் கூறியிருக்கிறார்.

மூத்த குடிமக்களை விரைந்து பாதிக்கக்கூடிய குரோனா 19 தொற்றிலிருந்து விலகியிருக்க, வெளியார்கள் அனுமதிக்கப் படுவதில்லை என்று கூறிய அவர், சமுக நல இயக்கத்தின் ஆலோசனைப்படி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.

சந்திக்க வேண்டிய அவசியம் இருந்தால் அவர்கள் வாசலுக்கு வெளியே உள்ள நுழைவாசலில் சந்திக்கத் தடையில்லை.

இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இருப்பதால் வருத்தமடையவும் ஏதுமில்லை.

மருத்துவ நடவடிக்கையில்லாமலும் பாதுகாப்பு பணியாளர்களுக்கு நோய்தொற்று வராமல் பாதுகாப்பது முதற்கடமை என்பதைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை அவர் உறுதி செய்தார்.

பலர் தங்கியிருந்து பணிசெய்ய பணிக்கப்பட்டிருக்கின்றனர்.

மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க இது வழிவகுக்கும். நாடுமுழுவதும் 200 க்கும் அதிகமான பராமரிப்பு இல்லங்கள் இருக்கின்றன. தேவைப்படும் பொருட்கள் தட்டுப்படாமல் இருக்கவும் வழி செய்யப்படிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here