ஜியார்ஜ்டவுன், மார்ச் 22-
தெப்பதிருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழா. இவ்விழாவின் போது எவ்வித கொரோனா பாதிப்பும் பதிவு செய்யப்படவில்லை.
சிங்கமுக காளியம்மன் ஆலய தெப்பத்திருவிழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா நடைபெற்றபொது கொரோனா 19 பாதிப்பு அச்சம் பரவலாக இருந்தது.
அனுமதியோடு நான்கு நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் 30 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டதாக ஆலயத் தலைவர் டாக்டர் பி.இராமசாமி கூறினார்.
பத்து நாட்களைக் கடந்துவிட்டபோதும் இதுவரை கொரோனா 19 தொற்று அறிகுறி யாருக்கும் இல்லையென்று மாநில சுகாதாரத்துறை தலைவர் டாக்டர் நோரெல்லா அரிஃபின் தெரிவித்திருக்கிறார்.