கோலாலம்பூர்: உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கோவிட் 19 தொற்றினை தடுக்க பல நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மலேசியாவிலும் இன்று வரை 1,624 பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு 17 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
மார்ச் 18ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரை ஆள் நடமாட்ட தடை உத்தரவை அரசு பிறப்பித்திருந்தது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோவிட் 19 தொற்றினை கட்டுபட்டுத்த வேண்டும் என்ற நோக்கில் எதிர் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக நாட்டின் பிரதமர் டான்ஶ்ரீ மொகீதின் யாசின் அறிக்கை வழி தெரிவித்திருக்கிறார்.