இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கோவிட் – 19 தொற்றா?

லண்டன் –

இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டிருப்பதாக (TESTED POSITIVE) அவரது அலுவலகச் செய்தி கூறியது.

71 வயதான அவருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனாலும் இளவரசரின் உடல் நிலை சீராக உள்ளது என அரண்மனைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் காரணமாக ஆண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக புதிய அனைத்துலக அறிக்கை கூறியது.

இத்தாலியில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்தது. கொரோனா தொற்றியவர்களில் 60 விழுக்காட்டினர் ஆண்கள் என்பதும்
தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here