தடை உத்தரவு ஏப். 14 வரை நீடிக்கும்

புத்ராஜெயா –

பொதுமக்கள் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கும் தடை உத்தரவு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. தேசியப் பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சரகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நாட்டில் கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

இதனையடுத்து ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்தத் தடை உத்தரவை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது என்று அவர் கூறினார்.

கடந்த மார்ச் 18ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது. நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்றால் தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று அரசாங்கம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here