உணவுப் பொருள் தயாரிப்பு, போக்குவரத்துச் சேவைகளுக்கு தடை இல்லை!

புத்ராஜெயா –

உணவுப் பொருள் தயாரிப்பு, போக்குவரத்துச் சேவைகள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்படும் என்று உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சர் டத்தோ அலெக்சாண்டர் லிங்கி கூறுகிறார்.

உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள், அவற்றைப் பொட்டலமிட்டு விநியோகம் செய்பவர்கள், மொத்த விற்பனையாளர்கள் ஆகியோர் இந்தத் தடையுத்தரவு காலத்தில் வழக்கம்போல் செயல்படலாம்.

உணவுப் பொருள் விநியோகச் சேவை என்பது மிகவும் முக்கியமான ஒரு தொழில்துறையாகும். அதனை முடக்கம் செய்தால் நாட்டில் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும்.

ஆனாலும் இக்காலகட்டத்தில் அவற்றின் பணியாளர்கள் மிகவும் கவனமாகத் தடையுத்தரவு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here