காவல் நிலையங்களுக்கு மனிதாபிமான உதவி – கெராக்கான் வழங்கியது

கோலாலம்பூர்:
கோவிட்-19 வைரசை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காவல்துறையினரின் பங்களிப்பு அளப்பரியது.

காவல் துறையினருக்கு உதவும் பொருட்டும் சமூக கடப்பாடு அடிப்படையிலும் கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டோமினிக் லாவ் தலைமையிலான குழு செந்தூல் மற்றும் செராஸ் மாவட்ட காவல் நிலையங்கள் மற்றும் ஜின்ஜாங் காவல் நிலையத்திற்கு முக கவசம், ஹேண்ட்செனடரிஸ், தண்ணீர் பாட்டில்களை வழங்கியது. செந்தூல் ஓசிபிடி திரு சண்முகநாதன் உதவிப் பொருட்களை பெற்று கொண்டார். மேலும் சாலை தடுப்பு சோதனையில் ஈடுபட்டிருக்கும் காவல் அதிகாரிகளையும் நினைவில் கொண்டு வீவா பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளும் உதவி பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த உதவிப் பொருட்கள் வழங்கும்போது கெராக்கான் கட்சி உதவித் தலைவர் டத்தோ பரம், இளைஞர் பிரிவு தலைவர் திரு ஆண்டிரு ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here