செவிடர்கள் காதில் விழவில்லையே!

செவிடர்கள் காதில் விழவில்லையே?

கோலாலம்பூர், மார்ச் 27-

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டை மக்கள் சாதாரணமாக எடுத்துகொண்டிருக்கின்றனரா? இதன் தீவிரத்தன்மையை மக்கள் உணராமல் சுதந்திரப் போக்குடன் உலாவருகின்றனர் என்று சுபாங் ஜெயா ஓசிபிடி ஏசிபி ரிசிக்கின் சாத்திமான் கூறியிருக்கிறர்.

இனியும் எச்சரிக்கை சாத்தியமில்லை. சட்டத்தைப் புறக்கணிப்பவர்களைக் கைது செய்வதே சரியானதாக இருக்கும் என்றார் அவர்.

பொது மக்களிடம் இன்னும் அலட்சியப் போக்கு நிலவுகிறது. வீட்டில் இருங்கள் என்பதன் அர்த்தம் புரியாமல் வெளிநடமாட்டத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.

மயிலே மயிலே என்பதில் அர்த்தமில்லை. அடுத்தது என்னவாக இருக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சில செவிடர்களின் காதில் என்ன சொன்னாலும் விழவில்லைபோல் தெரிகிறது.

அத்தியாவசியம் தவிர்த்து மக்கள் வெளிநடமாட்டதிற்கு அனுமதியில்லை. அத்தியாவசிய பொருள் வாங்க, அவசர மருத்துவம் போன்றவற்றிற்கே இணக்கம் மேற்கொள்ளப்படும்.

வெளியில் சென்று குடும்பத்தொடு பசியாறல் என்பது ஏற்றுக்கொள்வதற்கில்லை. ஒருவர் மட்டுமே வெளியில் சென்று வரவும் வீட்டிலேயே பசியாறலை வைத்துக்கொள்ளவும் வேண்டும்.

தப்ளிக் கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் தாமாகவே முன் வந்து மருத்துவ சோதனைக்கு உட்படவேண்டுமென்று கேட்டுக்கொண்ட அவர், சாலைத்தடுப்பு போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படியும் வாகனமோட்டிகளை ரிசிக்கின் சாத்திமான் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here