வாஷிங்டன் –
சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அங்கு நேற்று முன்தினம் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 43,700ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு பலி எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.
இந்த நிலையில் அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப்புக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், டிரம்ப்புக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட அதே நாளில் மெலானியா டிரம்ப்புக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.