பண்டார் சன்வே ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் மனிதாபிமான உதவி

கோவிட் 19 வைரஸ் காரணமாக தற்பொழுது நாட்டில் அமல்படுத்தப்பட்டிருக்கும் மக்கள் நடமாட்ட தடை அமல்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் வசதி குறைந்தவர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
பண்டார் சன்வே ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தை சுற்றியுள்ள சன்வே மலிவு விலை வீடுகள், டேசா மெந்தாரி, டேசா ரியா ஆகிய பகுதிகளில் குடியிருக்கும் வசதி குறைந்த குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அத்திவாசிய சமையல் பொருட்களை மனிதநேய அடிப்படையில் வழங்கியதாக ஆலயத்தின் தலைவர் டத்தோ மணிவாசகன் ராமசாமி கூறினார்.


மக்கள் நடமாட்ட தடை அமலில் இருக்கும் இக்காலகட்டத்தில் அக்குடியிருப்பாளர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் வர முடியாது என்பதால் கட்டம் கட்டமாக அவர்களை வரவழைத்து 60 வெள்ளி பெறுமானமுள்ள சமையல் பொருட்களை ஒவ்வொருவருக்கும் வழங்கியதாகத் தெரிவித்தார்.
அன்றாடம் வேலைக்கு சென்றால் தான் உணவு என்ற நிலையில் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு என் தலைமையிலான ஆலய நிர்வாகத்தினரின் ஆதரவோடு இந்த உதவியை வழங்கி வருவதாகக் கூறினார்.
தற்பொழுது மக்கள் நடமாட்ட தடை ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டிருத்தால் அடுத்த வாரம் 100 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கவிருப்பதாக டத்தோ மணிவாசகன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here