வர்த்தகர்களுக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்குமா? டத்தோ ஹாஜி அல்ஹாஜ் ஜவஹர் அலி கோரிக்கை

வர்த்தகர்களுக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்குமா?

உலகத்தை அச்சுறுத்தி வரும் கோவிட்19 வைரஸ் காரணமான பல நாடுகளில் மக்கள் நடமாட்ட கட்டுபாடு மற்றும் ஊரடங்கு ஆகியவற்றை அமல்படுத்தி வருகின்றனர். நம் நாட்டிலும் கடந்த மார்ச் 18ஆம் தேதி மக்கள் நடமாட்ட கட்டுபாடு அமல்படுத்தப்பட்டது.

மார்ச் 31ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்த தடை தற்பொழுது ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் அதிக பாதிப்புக்கு ஆளானவர்கள் வர்த்தகர்கள் என்றால் அது மிகையாலாது. தங்களின் வியாபாரத்தை நம்பி நுகர்வோருக்கு செக் வழங்கியிருக்கும் வர்த்தகர்கள் எண்ணிலடங்கா என்று மலேசிய இந்திய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அல்ஹாஜ் ஜவஹர் அலி தய்யூப்கான் வர்த்தர்கள் சார்பாக கூறினார்.

வர்த்தகர்களாகிய நாங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் வார்த்தையால் சொல்ல முடியாது. பிரதமரின் சலுகை அறிக்கை எங்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தாலும் வர்த்தகர்களாகிய எங்களுக்கு சில சலுகைகள் வழங்க வேண்டும்.

குறிப்பாக இல்லங்களுக்கு 15 விழுக்காடு மின்சார கழிவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடைகளுக்கு 2 விழுக்காடு மட்டுமே கழிவு வழங்கப்படுகிறது. அதே போல் அரசாங்க கட்டடத்தில் வர்த்தகம் மேற்கொண்டு வருபவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அதே போல் கோலாலம்பூர் நகராண்மை கழக இடங்களில் (டிபிகேஎல்) வாடகை கடை நடத்துபவர்களுக்கு அரசாங்கம் சலுகைகளை பெற்று தர வேண்டும் என்று டத்தோ ஹாஜி அல்ஹாஜ் ஜவஹர் அலி வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்ததாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத எஸ்எஸ்டி தொகையை மார்ச் 31ஆம் தேதி செலுத்த வேண்டும். அதனை தற்பொழுது ஏப்ரல் 30ஆம் தேதி வரை சுங்கத்துறை நீட்டிப்பு செய்துள்ளது.

வியாபாரம் வீழ்ச்சி கண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் வர்த்தர்கள் அந்த எஸ்எஸ்டி தொகையை செலவு செய்திருப்பர்.

அதனால் எஸ்எஸ்டி தொகையை செலுத்த நீண்ட கால அவகாசம் தேவை என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

மேலும் தற்பொழுது 6 விழுக்காடாக எஸ்எஸ்டியை 3 விழுக்காடு ஜிஎஸ்டியாக மாற்றினால் வர்த்தகர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று மலேசிய இந்திய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அல்ஹாஜ் ஜவஹர் அலி தய்யூப்கான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here