அரசாங்கத்தின் உத்தரவுக்கு பணிந்து 1 ஏப்ரல் முதல் 14 ஏப்ரல் வரை மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவின் போது பெலித்தா நாசி கண்டாரின் அனைத்து கிளைகளும் மூடப்படும் என்பதை இந்த செய்தி வாயிலாக தெரிவித்து கொள்கிறேன் என்று பெலித்தா சமுத்ரா பெர்தாமா சென்.பெர்ஹாட்டின் இயக்குநர் டத்தோ ஷியாபுடின் Dato’Sheyabuddin தெரிவித்தார்.
பினாங்கு, தாமான் சாய் லெங்கில் (பெலிதா நாசி காண்டார் கிளைகளின் தாய் கிளை) உள்ள பெலிதா நாசி கண்டார் கிளை மட்டுமே காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும்.
அரசாங்க பணியாளர்கள் 78,362 பேருக்கு மார்ச் 21 முதல் மார்ச் 29 வரை மலேசியா முழுவதும் உள்ள பெலிதா நாசி கண்டார் வழி உணவு மற்றும் இலவச பானங்கள் வழங்கியிருக்கிறது என்றார்.
மேலும் பினாங்கு, தாமான் சாய் லெங்கில் பெலிதா நாசி காண்டார் உணவகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதல் 300 பேருக்கு தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வரை உணவு வழங்கப்படும். தங்களின் அடையாள அட்டையை காண்பித்து உணவை பெற்று செல்லலாம்
“நாம் ஒன்றாக நன்மை செய்கிறோம், நல்லது செய்ய முடியாவிட்டால் தீமை செய்யக்கூடாது”