உத்தரவை மீறிய 26 பேருக்கு தலா வெ. 1,000 அபராதம்!

ஈப்போ –

பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறிய 26 பேருக்கு ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று தலா 1,000 வெள்ளி அபராதம் விதித்தது.

அபராதம் செலுத்தத் தவறினால் 2 மாதச் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த 26 பேரில் 3 பேர் பெண்களாவர்.

கடமையைச் செய்யவிடாமல் அரசு அதிகாரிகளைத் தடுத்த ஒரு நபருக்கு 6,000 வெள்ளி அபராதமும் செலுத்தத் தவறினால் 10 மாதச் சிறையும் விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here