பத்துமலைக்கு ஹெரிடேஜ் ( பராமரிய) இலாகா வழங்குவதாக கூறியிருந்த 5 லட்சம் வெள்ளி நிதி ஊராட்சித்துறையிடம் வழங்கப்பட்டு பின்னர் தேவஸ்தானத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தபோது அந்த நிதியை நேரடியாக வழங்குவதாக இருந்தால் வழங்குவீர். இல்லையெனில் எங்களுக்குத் தேவையில்லை பத்துமலை தேவஸ்தானத் தலைவர் டான்ஶ்ரீ நடராஜா கூறினார். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட இலாகாவினர் என்னை அழைத்து வழங்கப்படவிருக்கும் நிதியை தேவஸ்தானத்திற்கே வழங்குவதாகக் கூறியிருக்கின்றனர்.
ஊராட்சித் துறையிடம் அந்த நிதி சென்றால் அது எப்போது எங்களுக்குக் கிடைக்கும் என்று தெரியாது. ஆனால் நிதி நேரடியாக எங்களிடம் வழங்கும்போது உடனடி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அந்நிதி உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார். பக்தர்களின் வசதிக்காக இவ்வாண்டு பத்துமலையில் பல மேம்பாட்டுப் பணிகளை செய்திருக்கிறோம். பத்துமலை தேவஸ்தானத்தில் இன்னும் பல மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாகவும் டான்ச்ரே நடராஜா தெரிவித்தார்.








