சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த 4 வெளிநாட்டினர் கைது

பொந்தியான்  பெக்கான் நனாஸ், கம்போங் சுங்கை புருங் என்ற இடத்தில் பொது நடவடிக்கைப் படை (ஜிஓஎஃப்) சட்டவிரோத மதுபானம் தயாரித்த நான்கு வெளிநாட்டவர்களைக் கைது செய்துள்ளது. நேற்று (அக்டோபர் 24) மாலை 4.30 மணியளவில் 19 முதல் 44 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் ஒரு கொட்டகையில்  கைது செய்யப்பட்டதாக GOF ஐந்தாவது பட்டாலியன் கட்டளை அதிகாரி டிமின் அவாங் கூறினார்.

சந்தேக நபர்கள் RM15,992 மதிப்புள்ள சட்டவிரோத மதுபானங்களை தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை நாங்கள் கைப்பற்றினோம். குழு ஒரு வருடம் செயலில் இருந்தது விசாரணைகள் காட்டின. மதுபானம் தயாரிக்க நிலத்தடி அறையைக் கொண்ட ஒரு கொட்டகையை நாங்கள் கண்டது இதுவே முதல் முறை என்று அவர் திங்கள்கிழமை (அக் 25) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். சந்தேகநபர்கள் மூன்று வியட்நாமியர்கள் மற்றும் ஒரு மியான்மாரை சேர்ந்தவர்கள் என்று  டிமின் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் சம்சு என நம்பப்படும் 1.5 லிட்டர் எடையுள்ள 210 பாட்டில்கள், 20 லிட்டர் கொள்கலன்களில் 14 கேலன் சாம்சு, 10 பெட்டிகள், 3 கேஸ் டேங்க், 2 பானைகள், 22 பாக்கெட் சர்க்கரை, இரண்டு சமையல் அடுப்புகள் மற்றும் 1,000 வெள்ளி ரொக்கம் ஆகியவை அடங்கும். மதுபானம் தயாரித்தல் மற்றும் பதப்படுத்துதல் மற்றும் மது வடித்தல் உபகரணங்கள் வைத்திருத்தல் ஆகியவற்றுக்காக கலால் சட்டத்தின் பிரிவு 75 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here