கொரோனா அச்சம் தணியும் வரை தனித்திருப்போம்

சென்னை, ஏப். 1-

கொரோனா அச்சம் தணியும் வரை தனித்திருப்போம் என்று பொதுமக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா கிருமி கொடுந்தொற்றின் பெருந்தாக்கத்தில் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என 21 நாள் ஊரடங்கினை அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இதனால் நாடு மிகப் பெருமளவு முடங்கியிருக்கிறது. நம்முடைய தமிழ்நாடும் முடங்கியிருக்கிறது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு முதற்கட்ட நடவடிக்கை மற்றவர்களிடம் இருந்து தனித்திருத்தல்தான் என்பதை உலக சுகாதார நிறுவனம் தொடங்கி பலரும் வலியுறுத்திய காரணத்தால்தான், நான் இதனைத் தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகிறேன்.

கொரோனா அச்சம் தணியும்வரை தனித்திருப்போம்; மனத் திடத்துடன் துணிந்திருப்போம்; எந்நாளும் மக்களுக்குத் துணையிருப்போம் என மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here