இலங்கை ராணுவத் தளபதி நம்பிக்கை
கொழும்பு –
இலங்கையில் வரும் 14 நாட்களில் கொரோனா இல்லாமல் போகும் என 24ஆம் பிரிவின் ராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சிந்தகே கமகே நம்பிக்கை தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் நடந்த விழிப்புணர்வு இயக்கத்தில் அவர் பேசினார்.
“அம்பாறை மாவட்டத்தில் கிருமித் தொற்று இருந்தவர்கள், அவர்களுக்குத் தெரியாமலேயே வீடுகளுக்குச் சென்று பரப்பி உள்ளனர். எங்கள் கடமை கொரோனா தொற்றில் இருந்து மாவட்டத்தைக் காப்பாற்றுவதாகும்.
இன்னும் 14 நாட்களில் நாட்டில் இருந்து கொரோனா இல்லாமல் போய்விடும் என்பது என் நம்பிக்கை. அனைவரும் இந்தக் கிருமியை இல்லாமல் செய்யப் பாடுபட வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.