பொருள் விலையை கண்டபடி உயர்த்தும் கொரோனா குபேரர்கள்

விலை உயர்வு

கிள்ளான்,ஏப்ரல் 1-

கொரோனா விபரீதத்தை சாதகமாக மாற்றிக் கொண்டுள்ள மளிகைக் கடை உரிமையாளர்கள் மிகக் குறுகிய காலத்தில் தங்களை குபேரரர்களாக உயர்த்திக் கொள்ள திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றனர்.

மக்கள் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை 50 விழுக்காடு வரையில் உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்.

பண்டமாரான் வட்டாரத்தில் இயங்கும் பல்வேறு மளிகைக் கடைகள் பாக்கெட்டில் அடைக்கப்படாத உண்வுப் பொருட்கள், காய் கனிகளின் விலையை கண்டபடி உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்.

தாமான் செந்தோசாவில் இயங்கி வரும் அனைத்து கடைகளும் பொருட்களின் விலையை 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்.

ஒரு கிலோ தக்காளிப் பழத்தின் விலை 6 வெள்ளி வரை உயர்த்தப்பட்டு விட்டது. பல கடைகளில் வெங்காயத்தை பதுக்கத் தொடங்கி விட்டனர்.

“ஸ்டோக் இல்லை” என இவர்கள் சர்வச்சாதாரணமாக பொய் சொல்லத் தொடங்கி விட்டனர்.

பொருள் விலையை கண்டபடி உயர்த்தி கொரோனாவைப் பயன்படுத்தி பயனீட்டாளர்களிடம் கொள்ளையடிக்கப் பட்டு வருகிறது.

உள் நாட்டு பயனீட்டாளர் விவகார அமைச்சின் அதிகாரிகளும் கிள்ளான் நகராண்மைக் கழக அதிகாரிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இரவு 7 மணியைக் கடந்தும் வியாபாரம் செய்ததற்காக பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

இவை மட்டுமே போதாது.

பொருட்களின் விலை மீதும் இவர்களின் பார்வை விழ வேண்டும் என பொது மக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here