கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ் –

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும் வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கிவிட்டது. தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும்.” என்றார்.

சமூக விலகல் இந்த நேரத்தில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமான ஒரு சக்தியை உலகிற்கு அளித்துள்ளது. ஏனெனில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியபோது, சீனா குறித்து நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்தபோதிலும் மைக்கல் லெவிட் துல்லியமான கணிப்புகளை வெளியிட்டிருந்தார்.

சீனாவில் 80,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்படுவார்கள் மற்றும் 3,250 உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று மைக்கேல் லெவிட் மதிப்பிட்டு இருந்தார்.

அதுபோலவே நடந்து உள்ளது. சீனாவில் 3,277 உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், 81,171 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அவரின் கூற்றின்படியே சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் சீனாவில் கொரோனா வைரஸின் மையமாக இருந்த ஹுபே மாநிலம் நீண்ட நாட்களுக்குப் பின் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து மைக்கேல் கருத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here